கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், குறுகிய கால ஒப்பந்தம், உணவு விநியோகம், போக்குவரத்து மற்றும் ஃப்ரீலான்ஸ் பணிகளில் ஈடுபடும் இணையம் சார்ந்த தொழிலாளர்களுக்கு ரூ. 20,000 மானிய விலையில் இ-ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் அறிவித்துள்ளார். தமிழகத்தில் செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் http://tnuwwb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து இந்த மானியத்தைப் பெறலாம்.