மணிமுத்தா அணையில் ஷட்டர்கள் புதுப்பிக்கும் பணி நிறைவு

கள்ளக்குறிச்சி மாவட்டம் எடுத்த சூளாங்குறிச்சியில் உள்ள 36 அடி உயரம் (736.96 மில்லியன் கன அளவு) கொண்ட மணிமுத்தா அணையில் பழுதாகிய பழைய ஷட்டர்கள் புதுப்பிக்கும் பணி நிறைவடைந்துள்ளது. இதனால் நடப்பாண்டில் அணை முழு கொள்ளளவிற்கு தண்ணீரை சேமிக்க முடியும். கனமழை பெய்யும்போது 3 பழைய மற்றும் 4 புதிய ஷட்டர்கள் வழியாக மணிமுத்தா ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 5493 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் இந்த அறிவிப்பால் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி