சங்கராபுரம்: கோவில் உண்டியலை உடைத்த மர்ம நபர் கைது

சங்கராபுரம் தலைமை காவலர் திருமால் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, நெடுமானுார் ஏரிக்கரையில் உள்ள செம்பியம்மன் கோவில் உண்டியலை மர்ம நபர் ஒருவர் உடைத்துக்கொண்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்ததில், நெடுமானுாரை சேர்ந்த சுப்ரமணி மகன் அய்யப்பன், 46, என்பது தெரியவந்தது. இதையடுத்து அய்யப்பனை கைது செய்த போலீசார், உண்டியலை உடைக்க பயன்படுத்திய உலி, கம்பி, கிளவுஸ் மற்றும் ரூ. 432 பணத்தை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி