கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சராபாளையம் அடுத்த மாதவச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தி. இவர் சம்பவதினத்தன்று ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து ஹெல்மெட் அணிந்து பைக்கில் வந்த மர்ம நபர்கள் மாதவச்சேரி சிமெண்ட் குடோன் அருகே சாந்தியை வழிமறித்து அவர் அணிந்திருந்த 7 சவரன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து சாந்தி அளித்த புகாரின் பேரில் கச்சராபாளையம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.