கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ஜனவரி 9 ஆம் தேதி, மாவட்ட ஆட்சியர் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா முன்னேற்பாடுகள் குறித்த கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர், டி. ஆர்ஓ ஜீவா, நேர்முக உதவியாளர் தனலட்சுமி, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் வெங்கட்ரமணன், நகராட்சி ஆணையர் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து 412 ஊராட்சிகள், 5 பேரூராட்சிகள் மற்றும் 4 நகராட்சிகளில் ஜனவரி 14 ஆம் தேதி சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளது.