கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் மே 22 ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பத்தாம் வகுப்பு, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ, பி.இ, பி.டெக் படித்த வேலை தேடுபவர்கள் கலந்துகொள்ளலாம். வேலை தேடுபவர்கள் இணையதளத்தில் பதிவு செய்து இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.