கள்ளக்குறிச்சி அடுத்த தென் கீரனூரைச் சேர்ந்த கண்ணன் (35), தனது உறவினரான 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது அந்த சிறுமி 8 மாத கர்ப்பமாக உள்ளார். இது குறித்து கள்ளக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலக மகளிர் ஊர் நல அலுவலர் சுமதி அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் கண்ணன் மீது சட்டப்படி வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.