கள்ளக்குறிச்சி அடுத்த திருவரங்கம் நகரைச் சேர்ந்த முகமது யூசுப் (65) என்ற பிளம்பர், கேசவலு நகரில் ஒரு வீட்டில் பணிபுரிந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். அவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.