கள்ளக்குறிச்சி ஏமப்பேர் தனியார் மகாலில் மக்கள் நற்பணி கழகம் என்ற புதிய கட்சி துவக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. கழக தலைவர் முருகு தலைமை தாங்கி, கட்சி கொடியை அறிமுகம் செய்து வைத்து பேசினார். ஒன்றிய செயலாளர் முருகன் வரவேற்புரை ஆற்றினார். வருகின்ற சட்டசபை தேர்தலை ஒட்டி மேற்கொள்ள வேண்டிய கட்சிப் பணிகள் குறித்து இந்த விழாவில் ஆலோசிக்கப்பட்டது.