கள்ளக்குறிச்சியில் கச்சேரி சாலையில், 'தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' என்ற தலைப்பில் பா. ஜ. க. சார்பில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் பிரசார கூட்டம் மாவட்ட தலைவர் பாலசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர்கள் கார்த்தியாயினி, முருகானந்தம், மாநில செயலாளர் அஸ்வத்தாமன், மாவட்ட பார்வையாளர் ராஜ்குமார், அ. தி. மு. க. மாவட்ட செயலாளர் குமரகுரு, முன்னாள் அமைச்சர் மோகன், முன்னாள் எம். எல். ஏ. க்கள் அழகுவேலுபாபு, பிரபு, ஐ. ஜே. கே. வெங்கடேசன், த. மா. கா. கணேசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர்.