கள்ளக்குறிச்சி அருகே சோமநாதபுரத்தைச் சேர்ந்த 18 வயது தீபிகா, கொங்கராயம்பாளையம் உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். கடந்த 25ஆம் தேதி மாலை வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து தீபிகாவின் தாய் சந்தோஷ்குமாரி அளித்த புகாரின் பேரில், வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.