கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயது கூலி தொழிலாளி இளையராஜா, மார்ச் 2ம் தேதி இரவு நாகலூர் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே வேகத்தடையில் நிலை தடுமாறி பைக்கில் இருந்து விழுந்து பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த வரஞ்சரம் போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.