புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது மாற்றுத்திறனாளி பெண், விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் பகுதியில் உள்ள தனது வீட்டில் தனியாக இருந்தபோது, கள்ளக்குறிச்சி தெற்குமேட்டு தெருவைச் சேர்ந்த முருகன் (54) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. பெண்ணின் கூச்சல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் முருகனைப் பிடித்து விக்கிரவாண்டி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து முருகனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.