ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த பா்கூரைச் சேர்ந்த தொ.சிவக்குமார் (25) என்பவர், கள்ளக்குறிச்சி அருகே ஜேசிபி ஓட்டி வந்துள்ளார். கடந்த 11-ஆம் தேதி பொரசக்குறிச்சி காப்புக்காடு அருகே வழிமறித்த இரு இளைஞர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்து ரூ.10 ஆயிரத்தை பறித்துச் சென்றனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்ததில், கணங்கூரைச் சேர்ந்த ச.விஜய் (27) மற்றும் பொரசக்குறிச்சியைச் சேர்ந்த ம.வீரகமணிகண்டன் (எ) கிளி (21) ஆகியோர் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து விஜயை போலீஸார் கைது செய்தனர்.