அதன்படி சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள குரால், அனுமனந்தல், தொட்டியம், அம்மாப்பேட்டை ஆகிய பகுதிகளில், 83 பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சுகள் நேற்று வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கால்நடைப் பராமரிப்பு துறை உதவி இயக்குனர் கந்தசாமி மற்றும் கால்நடை மருத்துவர்கள் பங்கேற்றனர்.
இதேபோல் மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், கல்வராயன்மலை, திருநாவலூர், தியாகதுருகம், சின்னசேலம், சங்கராபுரம் ஆகிய 9 ஊராட்சி ஒன்றியங்களிலும் தலா 100 வீதம் மொத்தம் 900 பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட உள்ளது.