மேலும், தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் குறைந்த வட்டிக்கு பணம் பெற்று, அதிக வட்டிக்கு கொடுத்து வந்த தம்பதியினர், கடந்த 2024ம் ஆண்டு தலைமறைவாகினர். இந்நிலையில் சீட்டு கட்டி ஏமாந்த துரைராஜ் மனைவி கங்கா, (38) உள்ளிட்ட 54 பேர், ஏலச்சீட்டு நடத்தி, 2 கோடியே 60 லட்சத்து 66 ஆயிரத்து 867 ரூபாயை ஏமாற்றியதாக எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
இதுகுறித்து டி.எஸ்.பி., முத்துமணி, இன்ஸ்பெக்டர் பிரபாவதி, சப் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் ஆகியோர் விசாரித்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த சிவக்குமார், சூரியமகாலட்சுமி ஆகிய இருவரையும் போலீசார் நேற்று (மார்ச் 29) கைது செய்து விசாரித்து வருகின்றனர்.