தினமும் மின்மோட்டார் மூலம் இறைக்கப்படும் தண்ணீரினை பொதுமக்கள் பலர் குடிநீராக பயன்படுத்துகின்றனர்.
இந்த பொதுகிணற்றின் மேற்பகுதி திறந்த நிலையில் இருப்பதால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் கிணற்றுக்குள் செல்கிறது. மேலும், பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகள் தண்ணீரில் மிதப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு குடிநீர் கெடும் நிலை உள்ளது. எனவே, இரும்பு கம்பி மூலம் கிணற்றை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.