கள்ளக்குறிச்சி: மேடையில் கடுப்பான அமைச்சர் எ.வ. வேலு

கள்ளக்குறிச்சியில் திமுக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில், அமைச்சர் எ.வ. வேலு பேசிக்கொண்டிருந்தபோது, மேடையில் இருந்த ஒரு திமுக பிரமுகர் செல்போன் பார்த்துக்கொண்டிருந்தார். இதை கவனித்த அமைச்சர், "நான் பேசிட்டு இருக்கேன். நீ செல்போன் பார்த்துட்டு இருக்க" என அவரை கண்டித்தார். இந்த சம்பவம் கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. அமைச்சர்கள் எ.வ. வேலு, சிவசங்கர் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி