கள்ளக்குறிச்சி: சட்டம் ஒழுங்கு: கலெக்டர் ஆய்வு

கள்ளக்குறிச்சியில், சட்டம் ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டம் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடந்தது. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மாதாந்திர கூட்டத்தில், எஸ்.பி., ரஜத் சதுர்வேதி முன்னிலை வகித்தார். இதில், இம்மாதத்தில் நடந்த சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் மற்றும் பாதிப்பு ஏற்படக்கூடிய நிகழ்வுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. 

மேலும் வரும் ஏப்ரல் மாதம் நடக்கவுள்ள ஆர்ப்பாட்டங்கள், பிரச்சனை ஏற்படவாய்ப்புள்ள நிகழ்வுகள் குறித்து கலெக்டர் கேட்டறிந்து பிரச்சனை ஏற்படாத வகையில், நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஜீவா, திருக்கோவிலூர் சார் ஆட்சியர் ஆனந்த்குமார் சிங், கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனலட்சுமி, ஆர்.டி.ஓ., லூர்துசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி