கள்ளக்குறிச்சி: மொபட் மீது கார் மோதி விவசாயி பலி

கோயம்புத்தூர் மாவட்டம், துடியலூரைச் சேர்ந்த விவசாயி ரா. ஆனந்தன் (54), கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே செம்பாக்குறிச்சி கிராமத்தில் உறவினர் வீட்டு விருந்துக்கு வந்தபோது, சாலையைக் கடக்க முயன்றபோது கார் மோதி உயிரிழந்தார். விபத்து குறித்து கீழ்குப்பம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, கார் ஓட்டுநர் அ. அகமத்துல்லாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனந்தனின் உடல் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி