தமிழகத்தில் இன்று (மே 20) பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டம் 93.43% தேர்ச்சியுடன் 26வது இடத்தைப் பிடித்துள்ளது. வழக்கம்போல இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மாநில அளவில் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது.