கள்ளக்குறிச்சி: அரசு ஊழியர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்ற வேண்டும்: ஆட்சியர் அறிவுரை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு திட்டங்களை கடைக்கோடி பயனாளிகளுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் அர்ப்பணிப்பு உணர்வுடன் அலுவலர்கள் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார். 

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்துத் துறை தலைமை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் துறை வாரியாக வளர்ச்சித் திட்டங்கள், அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் வழிமுறைகள் குறித்தும் துறை அலுவலர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார். 

ஒவ்வொரு துறை அலுவலர்களும் தங்களது துறை சார்ந்த திட்டங்களை மாவட்டத்தின் கடைக்கோடி பயனாளிகளுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் அர்ப்பணிப்பு உணர்வுடன் தொடர்ந்து சிறப்பாகப் பணியாற்ற வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி