கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூலி தொழிலாளி பெருமாள் (47) போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.