கள்ளக்குறிச்சி: பா.ஜ., கொடி கம்பம் சேதம்

கள்ளக்குறிச்சி அடுத்த கனங்கூர் பஸ் நிறுத்தம் அருகே பா. ஜ. , கொடி கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. அவ்விடத்தில் ஏற்கனவே மூன்று முறை பா. ஜ. , கொடி கம்பத்தை மர்ம ஆசாமிகள் சேதப்படுத்தியுள்ளனர். இதனால் கொடி கம்பம் அருகே சிசிடிவி. , கண்காணிப்பு கேமராக்கள் அமைத்த நிலையில், கடந்தாண்டு விநாயகர் சிலை ஊர்வலத்தின் போதுயும் உடைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த 1ம் தேதி இரவு 11. 30 மணியளவில் மீண்டும் பா. ஜ. , கொடி கம்பத்தை மர்ம ஆசாமிகள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக பா. ஜ. , ஒன்றிய துணை தலைவர் வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி