கள்ளக்குறிச்சி: வெறிநாய் கடித்து 27 பேர் 'அட்மிட்'

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் சுற்றித் திரிந்த தெரு நாய் ஒன்று பொதுமக்கள் சிலரை விரட்டிக் கடித்துள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் ஒன்றுகூடி தெரு நாயை விரட்டியடித்தனர். அதனையொட்டி, கோட்டைமேடு, மோரைப்பாதை, செக்குமேட்டுத் தெரு பகுதிக்குச் சென்ற வெறிநாய் அவ்வழியாகச் சென்றவர்களை விரட்டிக் கடித்துள்ளது. 

இதில் கருணாபுரம், கோட்டைமேடு, மோரைப்பாதை சேர்ந்த மணிகண்டன், திலீப், ராஜ்குமார், சிவசங்கர், அனுஷா, ஜெயக்குமார் உட்பட 27 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுவீடு திரும்பினர். வெறிநாய் கடித்து 27 பேர் பாதிக்கப்பட்ட சம்பவம் கள்ளக்குறிச்சி பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி