கச்சராபாளையம்: சிமெண்ட் மூட்டைகள் திருடிய வாலிபர்கள் கைது

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டம், கண்டியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மதிவாணன் மகன் மணிவண்ணன் 25, லாரி ஓட்டுநரான இவர் கடந்த 22 ம் தேதி ஆந்திராவிலிருந்து சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு கச்சிராயபாளையத்தில் உள்ள கடைகளுக்கு இறக்குவதற்காக வந்துள்ளார். 

இரவு கடைகள் மூடப்பட்டதால் கச்சிராயபாளையம் புதிய பஸ் நிலையத்தில் லாரியை நிறுத்திவிட்டு துாங்கியுள்ளனர். இரவு 12 மணியளவில் லாரியின் பின்னாலிருந்து சத்தம் கேட்டுள்ளது. கீழே இறங்கி பார்த்தபோது லாரியின் தார்பாயை அவிழ்த்து 15 சிமெண்ட் மூட்டைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. 

இது குறித்த புகாரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்ததில் வடக்கனந்தல் குளத்தமேட்டு தெருவைச் சேர்ந்த அய்யாவு மகன் ராஜதுரை 30, காமராஜர் நகர் ராமநாதன் மகன் குணசேகரன் 30, ஆகியோர் சிமெண்ட் மூட்டைகளை திருடி சென்றது தெரிந்தது. இதனைத் தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி