கள்ளக்குறிச்சியில் ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்

நவம்பர் 18 அன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஜாக்டோ-ஜியோ சார்பில் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ரமேஷ், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் அனந்தகிருஷ்ணன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஆனந்தகிருஷ்ணன், இடைநிலை மற்றும் பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் மன்ற மாநில அமைப்பு செயலாளர் அண்ணாதுரை ஆகியோர் தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் இதில் வலியுறுத்தப்பட்டன.

தொடர்புடைய செய்தி