வரஞ்சரம் அடுத்த ராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த சகுந்தலா(31) என்பவர் கணவர் வெளியூரில் வேலை செய்வதால் தாய் வீட்டிற்கு சென்று தூங்கியுள்ளார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டை உடைத்து 250 கிராம் வெள்ளி கொலுசு, 20 கிராம் வெள்ளி செயின் மற்றும் ரூபாய் 8000 ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த வரஞ்சரம் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.