கடந்த சீசனில் நாடு முழுவதும் விவசாயிகளிடமிருந்து அதிகளவில் அரிசி மற்றும் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டதால், இவற்றைச் சேமிக்கும் கிடங்குகளில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, முன்னுரிமை மற்றும் அந்தியோதயா கார்டுதாரர்களுக்கு ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான அரிசி மற்றும் கோதுமையை ஒரே தவணையில் வழங்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசும் சம்மதம் தெரிவித்துள்ளது.