சங்கராபுரத்தில் வெள்ளாடு திருட்டு: போலீசார் விசாரணை

சங்கராபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்த சிங்காரம் மகன் காசிவேல் (55) என்பவர், தனக்குச் சொந்தமான 2 வெள்ளாடுகளை வீட்டின் அருகில் கட்டி வைத்திருந்தார். நேற்று காலை பார்த்தபோது ஆடுகள் மாயமாகி இருந்தன. மர்ம நபர்கள் ஆடுகளைத் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி