கள்ளக்குறிச்சி கோட்டைமேட்டைச் சேர்ந்த தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு முடித்த 15 வயது மாணவி அபிநயா வீட்டில் இருந்து காணாமல் போனார். குடும்பத்தினரும் உறவினர்களும் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மாணவி எங்கு சென்றார் என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.