கள்ளக்குறிச்சி: மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் வானாபுரம் அடுத்த கடுவனூர் கிராமத்தைச் சேர்ந்த பொன்னுக்கண்ணு (51) என்ற விவசாயி, பாக்கம் புதூர் கிராமத்தில் உள்ள தனது நிலத்தில் கரும்பு பயிரிட்டிருந்தார். வனவிலங்குகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாக்க மின்சார வேலி அமைத்திருந்த நிலையில், மறதியால் விளைநிலத்திற்குச் சென்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இது தொடர்பாக வட பொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி