கள்ளக்குறிச்சி: பூச்சி மருந்து குடித்து விவசாயி தற்கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே காட்டுசெல்லூரைச் சேர்ந்த 32 வயது விவசாயி இளவரசன், கடந்த 2 ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். பிப்ரவரி 6 ஆம் தேதி வலி அதிகமானதால் மனமுடைந்து, தனது விளைநிலத்தில் இருந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டார். சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்தார். இது குறித்து ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி