கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இதற்காக அந்தந்த பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் பிரசாந்த் ஆய்வு நடத்தினர். கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அகரக்கோட்டாலம் அரசு உதவி பெறும் ஆர். சி. , பள்ளி, தண்டலை ஊராட்சி அல் ரஹ்மான் அரசு நிதி உதவி பெறும் தொடக்கப்பள்ளி, நீலமங்கலம் ஸ்ரீ ராம் அரசு நிதி உதவி பெறும் நடுநிலைப் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தின் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு நடத்தினார். சமையற்கூடம் அல்லாத மாற்று சமையற்கூடத்தில் காலை உணவுத் திட்டத்தில் உணவுகளை தயார் செய்திட அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து, அகரக்கோட்டாலம் கிராமத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பயனாளிகளின் விபரம் குறித்து வீடுவீடாக சென்று நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.