இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கு தேவையான பீரோ, நாற்காலிகள், மின் விசிறிகள் மற்றும் விளக்குகள், பக்கெட், துடைப்பம், சாக்பீஸ் பெட்டிகள், குப்பைக்கூடை, கழிவறை பொருட்கள், கரும்பலகை பெயிண்ட் என ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் சீர் வரிசையாக வழங்கப்பட்டன. பள்ளி தலைமை ஆசிரியர் மலர்க் கொடி தலைமை தாங்கினார்.
ஊராட்சி தலைவர் தென்னரசி பாண்டியன், துணைத்தலைவர் தனம் பாலகிருஷ்ணன், பள்ளி மேலாண்மைகுழு தலைவர் ஜான்சி ராணி, கல்வியாளர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பட்டதாரி ஆசிரியர் சிவகாமி வரவேற்றார்.
வட்டார கல்வி அலுவலர்கள் பழனிமுத்து, ராஜசேகர், வட்டார வள மைய மேற்பார்வையாளர் செல்வராஜ், ஆசிரிய பயிற்றுனர் அனுராதா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.