கள்ளக்குறிச்சி: தூய்மை பணியாளரிடம் செயின் பறிப்பு

வாணாபுரம் அடுத்த புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 52 வயது தூய்மைப் பணியாளர் சித்ரா, சாலையோரமாக நடந்து சென்றபோது பைக்கில் வந்த மர்ம நபர் அவரிடமிருந்த 42 கிராம் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பி ஓடினார். அவரைப் பிடிக்க முடியாததால், வடபொன்பரப்பி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரைத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி