கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 17 வயது சிறுவன் ஒருவன், அதே வயதுடைய சிறுமியை திருமணம் செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவல் அறிந்த சின்னசேலம் சமூகநல விரிவாக அலுவலர் வேதவல்லி, உடனடியாக விசாரணை மேற்கொண்டு கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், காவல்துறையினர் சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.