கள்ளக்குறிச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

கள்ளக்குறிச்சி அருகே பெருவங்கூர் கிராமத்தில், சிங்கப்பூரில் பணிபுரியும் கணவருடன் 3 பிள்ளைகளுடன் வசித்து வந்த சுஜாதா (41), குழந்தைகளுடன் தனியார் பொழுதுபோக்கு பூங்காவிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 21 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து, கைரேகை பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி