கள்ளக்குறிச்சியில் பிப்ரவரி 15 அன்று பாஜக தலைவர் பாலசுந்தரம் தலைமையில் நடைபெற்ற நமோ டிராபி மாரத்தான் போட்டிக்கு முறையான அனுமதி பெறாததால், போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டதாகக் கூறி, பாஜக மாவட்ட தலைவர் பாலசுந்தரம், விளையாட்டு மற்றும் மேம்பாட்டு பிரிவு மாவட்ட அமைப்பாளர் தினேஷ், மாவட்ட செயலாளர் கோவிந்தசாமி உள்ளிட்ட 33 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.