கள்ளக்குறிச்சி: பைக் திருட்டு.. போலீசில் புகார்

கள்ளக்குறிச்சி எம். ஜி. என் நகரைச் சேர்ந்த விஜய் மனோஜ் என்பவர், தனது உறவினர் நித்திஷ் வீட்டிற்கு முன்பு மே 20 ஆம் தேதி நிறுத்தியிருந்த யமஹா பைக் மறுநாள் காலை காணாமல் போனது. இது குறித்து கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி