கள்ளக்குறிச்சியில் அம்பேத்கர் சிலை வைப்பது தொடர்பாக திமுகவினர் அவதூறு பரப்பி பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுவதாக திமுகவை கண்டித்து அதிமுக சார்பில் செந்தில்குமார் எம்எல்ஏ தலைமையில் கச்சேரி சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் குமரகுரு, முன்னாள் அமைச்சர் மோகன், முன்னாள் எம்எல்ஏக்கள் அழகுவேல் பாபு, பிரபு, முன்னாள் எம்பி காமராஜ் மற்றும் பலர் பங்கேற்றனர்.