புதுச்சேரி: சாலை விபத்தில் வாலிபர் பலி

புதுச்சேரி கோவிந்த சாலை பகுதியைச் சேர்ந்தவர் அமலநாதன். இவர் கடந்த 12ஆம் தேதி அதிகாலை சாரம் பகுதியிலிருந்து சைக்கிளில் கோவிந்தசாலையில் உள்ள அவரது வீட்டிற்கு வரும் பொழுது காமராஜர் சாலை கோவிந்தசாலை சந்திப்பு அருகே சைக்கிளில் சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்பொழுது அதிவேகமாக வந்த பைக், சைக்கிள் மீது மோதியதில் இரண்டு சக்கர வாகனத்தில் வந்த மனோஜ்குமார் மற்றும் சைக்கிளில் வந்த அமலநாதன் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். 

உடனே அங்கிருந்த பொதுமக்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு இருவருக்கும் தீவிர அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பைக்கை ஓட்டி வந்த மனோஜ்குமாருக்கு கடந்த மூன்று நாட்களாக தீவிர சிகிச்சை அளித்தும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் சைக்கிளில் வந்த அமலநாதன் இன்னும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி