வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமில்54, 296 விண்ணப்பம் வழங்கல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம் மற்றும் இணைய வழியில் மொத்தம் 54,296 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களால் சரிபார்க்கப்பட்டு வருகின்றன. இதன் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 15ஆம் தேதி வெளியிடப்படும் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளார். இந்த சிறப்பு முகாம் மூலம் அதிக எண்ணிக்கையிலானோர் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்க்க விண்ணப்பித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி