“கடம்பூர் ராஜூ மன்னிப்பு கேட்க வேண்டும்” - ஓபிஎஸ் காட்டம்

அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். மேலும், “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து கடம்பூர் ராஜூ பேசியது கண்டனத்திற்கு உரியது. இதைப்பார்க்கையில் வளர்த்த கிடா மார்பில் பாய்ந்தது என்ற பழமொழி தான் நினைவிற்கு வருகிறது. இது உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வதைப் போன்றது. பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது ஜெயலலிதா செய்த வரலாற்றுப் பிழை அல்ல அது புரட்சி” என்றார்.

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி