"மேகதாது அணை கட்டப்பட்டிருந்தால், தற்போது தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கும் தண்ணீர்கூட கிடைத்திருக்காது" என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேசிய அவர், காவிரி நீர் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடையது என்றும், அணை கட்டும் முயற்சியை தமிழக அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.