நடிகர் ரஜினிகாந்த்தின் 'கபாலி' திரைப்படத்தை ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் விநியோகம் செய்த தயாரிப்பாளர் KP சௌத்ரி தற்கொலை செய்து கொண்டுள்ளார். கோவாவில் உள்ள KP சௌத்ரியின் வீட்டில் அவரது உடல் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இவர் மீது போதைப் பொருள் வழக்கு இருப்பதாலும் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருந்ததாலும் தற்கொலை செய்து கொண்டதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.