திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் கு.ப.கிருஷ்ணன்?

சட்டமன்ற தேர்தலில் லால்குடி தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் அதிமுக வேட்பாளர் லீமா ரோஸிடம் தோல்வியடைந்தார். இந்நிலையில், விஜய் ராஜினாமா செய்யவுள்ளதாக கூறப்படும் திருச்சி கிழக்கு தொகுதியில் கு.ப.கிருஷ்ணன் மீண்டும் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அமைச்சரவை பட்டியல் தொடர்பாக பட்டினப்பாக்கத்தில் விஜய் ஆலோசனை நடத்திவரும் நிலையில், அவரை கு.ப.கிருஷ்ணன் நேரில் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி: நியூஸ் 18

தொடர்புடைய செய்தி