சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் சர்க்காரியா கமிஷன், டாஸ்மாக் ஊழல் உள்ளிட்ட அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை வாசித்தார். இதற்குப் பதிலளிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் திமுக எம்.எல்.ஏ-க்கள் வெளிநடப்பு செய்தனர். இதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் மு.க.ஸ்டாலினுடன் கே.என்.நேரு மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.