மு.க.ஸ்டாலின் வழியை மறித்த தொண்டரை தாக்கிய கே.என்.நேரு

தாராபுரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, வாகனத்தை மறித்த தொண்டரை முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தாக்கிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரச்சார வாகனத்திலிருந்து இறங்கி மளிகைக் கடைக்குச் சென்று திரும்பிய ஸ்டாலினைப் பார்க்கத் தொண்டர்கள் முண்டியடித்துக்கொண்டு வழியை மறித்தனர். இதனால் ஆத்திரமடைந்த கே.என்.நேரு, தொண்டர் ஒருவரை அடித்து விலக சொன்ன வீடியோ இணையத்தில் வைரலாகி விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி

✕
✕