காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் சென்னை வருகை தந்துள்ள நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று (பிப்.22) இரவு சந்திக்க உள்ளார். முன்னதாக, மீனம்பாக்கம் அருகே தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார். பின்னர் முதலமைச்சர் சந்திப்பில், திமுக - காங்., கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.